Monday, January 19, 2009

அறம் செய விரும்பு

அறம் செய்ய விரும்பு - ஒளவையார்.

தமிழின் முதல் எழுத்து 'அ'. அந்த 'அ' விற்கு முதல் பதமாய் அம்மாவை தவிர்த்து, எனக்கு மட்டும் அல்ல அனைத்துலக தமிழ் சமுதாயத்திற்கும் 'அறம்' என போதிக்கிறது தமிழ். இதன்மூலம் அறத்திற்கு, தமிழ் வழங்கும் சிறப்பிடம் தெரிகிறது. இந்த கிளவியை தமிழுக்கு வழங்கிய கிழவி ஒளவையார். அந்த கிழவியை தமிழ் உலகிற்கு வழங்கிய கன்னித் தமிழ் அன்னையை போற்றி வணங்குகிறேன்.

அறம் செய்ய விரும்பு - எனக்கு என்றில்லாமல் நாம் அனைவருக்கும் படிக்கும் போது அனைவருக்கும் போதிக்கப்பட்ட ஒன்று, இந்த வாசகம். இரண்டு கோடு போட்ட நோட்டில் அழுத்தம் திருத்தமாக எழுதிப் பழகி நாம் கற்று கொண்ட இந்த வாசகம். இன்றும் இந்த வாசகம் சொல்லி கொடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. சிறு வயதில் சொல்லி கொடுத்தார்கள். அறம் செய்ய விரும்பு என்று.

இந்த அறம் என்றால் என்ன? என்று நாம் ஆராய போனால் நம்மால் இப்போது மீண்டு வர முடியாது. அதனாலேயே அப்போதைக்கு அறம் என்றால் நல்ல செயல்கள், கருமங்கள் ( கருமம், கருமம்...என்று யாரும் தலையில் அடித்து கொள்ள வேண்டாம் ) என்று சொல்லி. நாம் பிறருக்கு உதவ வேண்டும் என்று நம் சின்ன அறிவுக்கு புரிகிற மாதிரி சொல்லி ஒப்பேற்றி விட்டார்கள்.

அறம் என்றால் பிச்சை போடுவதா? இல்லை தன்னால் உண்ண முடியாத பழங்கஞ்சியை வறியவனுக்கு கொடுத்து பசி ஆற்றுவதா? இல்லை என்பது என் கருத்து. பின்னே அறம் என்றால் என்ன?

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பொறுப்பு, பணி, வேலை , கடமை இருக்கும் அதனை தான் மனசாட்சிக்கு பயந்து நீதியுடனும், நேர்மையுடனும் செய்வதே அறம் ஆகும். இது சாதாரண ஊழியர்களுக்கு மட்டும் அல்ல, நல்ல, வல்ல அரசுக்கும் பொருந்தும்

என்ன? நான் சொல்வது சரிதானே?

நன்றி

மீண்டும் வருக...

மீண்டும் வருவேன்.

9 comments:

Anonymous said...

ஏன்? இந்த கொல வெறி?

Anonymous said...

அம்புட்டு நல்லவறா நீங்க.....?

கூட்ஸ் வண்டி said...

முதல் பிணூட்டமே அநானிகளிடம் இருந்தா?
வருக.
வணக்கம்.
நன்றி.

கார்த்திகைப் பாண்டியன் said...

//அறம் என்றால் பிச்சை போடுவதா? இல்லை தன்னால் உண்ண முடியாத பழங்கஞ்சியை வறியவனுக்கு கொடுத்து பசி ஆற்றுவதா? இல்லை என்பது என் கருத்து.//

நியாயமான வார்த்தைகள்.. நன்றாக உள்ளது.

கூட்ஸ் வண்டி said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக, மிக நன்றி. அண்ணன் கார்த்திகைப் பாண்டியன் அவர்களே.

நட்புடன் ஜமால் said...

\\இந்த கிளவியை தமிழுக்கு வழங்கிய கிழவி ஒளவையார்\\

நல்ல சொல்லாடல்

ராம்.CM said...

//ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பொறுப்பு, பணி, வேலை , கடமை இருக்கும் அதனை தான் மனசாட்சிக்கு பயந்து நீதியுடனும், நேர்மையுடனும் செய்வதே அறம் ஆகும். இது சாதாரண ஊழியர்களுக்கு மட்டும் அல்ல, நல்ல, வல்ல அரசுக்கும் பொருந்தும்.//

இதுதான் மிக சரி.! நல்லா இருந்தது....

நையாண்டி நைனா said...

மிக நன்றாய் இருக்கிறது.

கோவி.கண்ணன் said...

//Favorite Movies
கிழக்கே போகும் இரயில் இரயிழுக்கு நேரமாச்சு இரயில் பயணங்களில் அஞ்சரைக்குள்ள வண்டி.//

அஞ்சரைக்குள்ள வண்டி :))))))))

ஒரு முடிவோட தான் எழுத வந்திருக்கிங்க ! வாழ்த்துகள் !