Thursday, March 5, 2009

பதில் சொல்வது எப்படி?

அது ஒரு இனிமையான... இல்ல ஒரு இக்கட்டானா... இல்ல இல்ல பொன் மா... இல்ல.. இல்ல.. ஒரு சோதனையா.... வேண்டாம், வேண்டாம், இப்ப வேண்டாம், முடிஞ்ச உடனே முடிவு பண்ணுவோம்.

வீட்டுக்குள்ளே நுழைஞ்சும், நுழையாம இருக்கும் போதே...

"இன்னிக்கி நான் அல்வா கிண்டி வச்சிருக்கேன் நீங்க சாப்டு பார்த்துட்டு சொல்லுங்க"

"சரீ.... கை கால் முகம் கழுவிட்டு வறே...ன், டேபிள்லே வைய்யி...."

"ஹா....ன், நல்லா இருக்கே..........! எதை? எதை...? பார்த்து செஞ்சே"

"ஏன்...? எங்களுக்கெல்லாம் தன்னாலே செய்ய தெரியாதோ? எதையாவது பார்த்து... இல்லை யாரவது சொல்லி கொடுத்தா தான் தெரியுமோ?"

"___________"

"இல்லே... நேற்று காலையிலே கொண்டுவந்து போட்டீங்களே அந்த பழைய பேப்பர் கட்டு, அதுலே ஒரு பேப்பர்லே இருந்துச்சு, அதிலே கொடுத்திருந்தாங்க அதை பார்த்து செஞ்சேன். உங்களுக்கு பிடிக்குமே என்று...."

" அப்படியா...! நல்லா இருக்கே... பஸ்டு செஞ்ச மாதிரியே இல்லை"

"சும்மா.... எனக்காக சொல்ல கூடாது.... உண்மையிலே எப்படி இருக்கு...?"

"உண்மையிலே நல்ல இருக்குப்பா... நான் ஏன் பொய் சொல்லணும்?"

"சும்மா... சும்மா எனக்காக சொல்லாதீங்க? உண்மைலே சொல்லுங்க"

"இன்னும் கொஞ்சம் பதமா, மெல்லுஸ இருந்தா இன்னும் சூப்பரா இருக்கும்... இப்ப கொஞ்சம் சுமாரா இருக்கு"

" அப்படில்லாம் சொல்லாதீங்க... நான் இதை செய்யவே எவ்ளோ கஷ்டபட்டேன் தெரியுமா?..... அடச்சே... இந்த ஆம்பிளைங்களே இப்படி தான், கஷ்டபட்டு செஞ்சி கொடுத்தா இப்படி தான் குத்தம் சொல்லிகிட்டே இருப்பாங்க... ஹ்ஹும்..."

" __ # * $* $* # ____ "


* * * * * *

17 comments:

நையாண்டி நைனா said...

அனுபவம் ரொம்ப பயங்கரமா தான் இருக்கு...

நையாண்டி நைனா said...

இப்படி எல்லாம் கேட்டா? பதில் சொல்றது கஷ்டம் தான்.
எங்களுக்கும் சரி. கல்யாணம் பண்ணிகிட்ட புண்ணிய ஆத்மாக்களுக்கும்.

கூட்ஸ் வண்டி said...

வாங்க... வாங்க... வாங்க...
என்னடா ஒருத்தரும் வரலியேன்னு நினைத்தேன். நீங்களாவது வந்திங்களே.

கூட்ஸ் வண்டி said...

அட, வந்த நீங்களும் உருப்படியா ஒரு பதிலும் சொல்லாமே போய்ட்டீங்களே?

வருகைக்கு நன்றி.

Anonymous said...

யோவ் நீயெல்லாம் பதிவு எழுத வரலைன்னு யாரு கவலைபட்டா?

கூட்ஸ் வண்டி said...

//பெயரில்லா கூறியது...
யோவ் நீயெல்லாம் பதிவு எழுத வரலைன்னு யாரு கவலைபட்டா?//

அன்பரே அனானி. கோவிச்சுக்காதீங்க.
அவ்வளோ மட்டமவா இருக்கு?

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கார்த்திகைப் பாண்டியன் said...

நண்பா.. சொந்த அனுபவமா.. பொண்ணுங்கள என்ன பண்ணாலும் திருப்தி படுத்த முடியாதுங்கறது உண்மைதான் போல.. ஐயோ.. ஐயோ..

கார்த்திகைப் பாண்டியன் said...

//யோவ் நீயெல்லாம் பதிவு எழுத வரலைன்னு யாரு கவலைபட்டா?//
ச்சே ச்சே.. அவர் சும்மா சொல்றாரு.. உங்கள் சேவை வலைத்தளத்துக்கு தேவை..

ராம்.CM said...

அனுபவம் ரொம்ப பயங்கரமா தான் இருக்கு...

அறிவிலி said...

நல்லா இருக்குங்க.நிஜமா பல வீட்ல நடக்குறதுதான்.

இந்த பெயரில்லாவையெல்லாம் கண்டுக்காதீங்க..

கார்க்கி சொல்றா மாதிரி நாம ஒண்ணும் அவங்களை வற்புறுத்தலையே

கூட்ஸ் வண்டி said...

Thanks for all.

PEACE TRAIN said...

பேஷ் பேஷ்

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Ramesh Ramar said...

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News