வணக்கமுங்க,
நானும் இந்த வலை உலகத்தில் எனது சேவையை செஞ்சி, தமில வளர்க்களாம்னு பார்த்தா, அடப்பாவமே...! எதை பார்த்தாலும் பதிவாகவே தெரியுது, ஆனா ஆக்கமா ஒரு பதிவும் தேற மாட்டேங்குதே...!
பல்லுப் போன கிழவிலே இருந்து "தில்லு" காட்டுர அழகி வரைக்கும், இது தினத்தந்தியில் வருமே அந்த மாதிரி அழகி இல்லை, உண்மையிலேயே அழகிகள் தான் ( ஹையா...! நான் மருத்துவர். மாத்ருபூதம் போன்ற பிற மருத்துவர்களை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை).
பஞ்சரான பேருந்தின் பாசஞ்சராப் போய் பஞ்சரான கதைகளை கேள்விப்படும் போதும்,
'மேட் இன் இந்தியா' அழகி திரிஷாவாகட்டும் அல்லது "மேட் இன் இந்தியா" என்று பாடி திரிகிற அலிசா ஆகட்டும், அவர்களை பற்றி ஏதாவது ஒரு செய்தி படிக்கும் போதும்,
வீட்டில் தொல்லைப் படுத்தும்..... தங்கமணி இல்லைங்க, தங்கமணியையே போக்கு காட்டும் மவுசு ( ஆண்டவா அடுத்த பெறவிலே நான் மவுசாகவோ, கரப்பானாகவோ பொறக்க வேண்டும்), அந்த தங்கமணியையும் எப்பவாவது எனது அறிவு திறத்தால்( ! ), போக்கு காட்டி விட்டு நான் நைசாக நெட்டு பக்கம் வந்தால் (சத்தியமா பதிவு பக்கம் தான்) என்னையே டபாய்க்கும் மவுசு...
இப்படி எதை பார்த்தாலும் பதிவு எழுது, பதிவு எழுது என்று இழுக்கிறதே,
போக வேண்டிய இடம் எக்மோர் என்று இருக்கும், கையிலே நாலு ரூபாயும் இருக்கும், டிக்கட் எடுக்கும் போது.. "ஒரு கோல்ட் கிங்ஸ்" என்று சொல்ல வந்து பின்னர், "ஒரு எக்மோரே" என்று சொல்லுவோமே அதை போல, எதை பார்த்தாலும் பதிவுக்கான செய்தியாக மனதில் வந்து, பின்னே சாதாரண நிகழ்வாகிறதே,
இதுக்கு பேரு தான் பதிவுப் போதையா? எனக்கு மட்டும் தான் இப்படியா...? இல்லை, எல்லாருக்குமே இப்படி தானா...?
நன்றி.
மீண்டும் வருக,
நானும் வருவேன்...
Monday, January 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
சத்தியமாக நண்பரே.. நமக்கென ஒரு வலைப்பூவை ஆரம்பித்த பின் எதை பார்த்தாலும் இதை பற்றி எப்படி எழுதலாம் என்று தான் தோன்றுகிறது.. கவலை படாதீர்கள்.. எல்லாம் சரியாகி விடும் என நம்புவோமாக...
மிக நல்லா இருக்கு....
கவலை பட வேண்டாம், எனக்கும் அப்படித்தான் இருந்துச்சு...
Post a Comment