Friday, January 2, 2009

கூட்ஸ் வண்டி - ஓர் அறிமுகம்.

வண்டிகள் பல விதம், ஒவ்வொன்றும் ஒரு விதம். அதில் நான் ஒரு தனி விதம். எனக்கென்று தனியாக எதுவும் கிடையாது, இதுவே எனது தனிச் சிறப்பு ஆகும். எனக்கென்று தனியே ஒரு வழித்தடமோ, குறியீட்டு எண்னோ கிடையாது. நான் இன்ன பொருளை தான் ஏற்றி செல்ல வேண்டும் என்ற வரை முறையோ கிடையாது. எனக்கான வேகமும் சிறப்பித்து கூறும்படி இல்லை. சிறப்பித்து கூறுவாரும் இல்லை. இருப்பினும் நான் எனது கடமையை செய்கிறேன். செய்து கொண்டே இருப்பேன்.

கூட்ஸ் வண்டியில் வராத பொருள் இல்லை, இதற்கு கல்லும் ஒன்றுதான் வைரமும் ஒன்றுதான். கூட்ஸ் வண்டி பயணிக்கும் பாதைகளும் அதனால் தீர்மானிக்கப்படுவதில்லை. இது அநேக விரைவு பயணிகளுக்கு வழி விட்டே ஒதுங்கி நிற்கும்.

இது எந்த பொழுதிலும் முதல் பெட்டி கொண்டதை ஒருவாராகவும் வேறு பெட்டியில் உள்ளதை ஒருவாராகவும் கருதியது இல்லை. சுருங்க சொன்னால் கூட்ஸ் வண்டிக்கு வகுப்பு பேதம் பிடிக்காது.

இந்த கூட்ஸ் வண்டி தங்களுக்கு தேவையான அனைத்தையும் சுமந்து வரும். இதற்கு தெரியாது அது குப்பையா, மாணிக்கமா என்று. ஆகவே தங்களின் மனம் போன போக்கில் தங்களுக்கு தேவையானதை எடுத்து அதற்கு கூலியாய் உங்கள் கருத்தை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நம்மில் பலர் பல வண்டிகளில் பயணம் செய்திருப்பார்கள், ஆனால் கூட்ஸ் வண்டியில் பயணம் செய்திருப்பவர்கள் மிகச்சிலரே. ஆகையினால் இந்த
கூட்ஸ் வண்டி பயணம் உங்களுக்கு ஒரு இனிய அனுபவத்தையே தரும்.

நன்றி

மீண்டும் வருக.

55 comments:

கூட்ஸ் வண்டி said...

முதல் பின்னூட்டம் கொடுத்த திரு SPIDEY அவர்களுக்கு மிக நன்றி.

நாமக்கல் சிபி said...

!?

அப்போ நான் மீ த ஃபர்ஸ்ட்டு இல்லையா?

நாமக்கல் சிபி said...

இது போங்கு ஆட்டம்!

முதல் பின்னூட்டம் நீங்களே போட்டுக்கிட்டீங்க!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

நாமக்கல் சிபி said...

//நம்மில் பலர் பல வண்டிகளில் பயணம் செய்திருப்பார்கள், ஆனால் கூட்ஸ் வண்டியில் பயணம் செய்திருப்பவர்கள் மிகச்சிலரே. ஆகையினால் இந்த
கூட்ஸ் வண்டி பயணம் உங்களுக்கு ஒரு இனிய அனுபவத்தையே தரும்.
//

கூட்ஸ் வண்டில ஜனங்க பிரயாணம் பண்ண முடியாதே!

சரக்கை ஏத்திட்டு வந்த எங்க ஸ்டேஷனுக்கு வரதை இறக்கிக்கிறோம்!


கூட்ஸ் வண்டியிலே ஒரு பிளாகு வந்திடுச்சு!

பிளாக் செய்வதற்கு கூகிள் இடம் காலி ஆகிடுச்சு!

கூ கூ கூ கூ!

நாமக்கல் சிபி said...

கும்மி அலவ்டா?

ஷாஜி said...

READY JOOT..

Anonymous said...

இந்த வண்டிக்கு பெர்மிட் வாங்கியாச்சா?

லைசென்ஸெல்லாம் இருக்கா?

எங்கே 8 போட்டு காட்டுங்க பார்க்கலாம்?

Anonymous said...

அப்படியே எனக்கு லிஃப்ட் கிடைக்குமா?

நையாண்டி நைனா said...

உங்கள் சேவை நாட்டுக்கு தேவை

கூட்ஸ் வண்டி said...

/*!?

அப்போ நான் மீ த ஃபர்ஸ்ட்டு இல்லையா?*/

இதயத்தில் ஃபர்ஸ்ட் நீங்க தான் (திரு.கலைஞருக்கு நன்றிகள்)

கூட்ஸ் வண்டி said...

/*இது போங்கு ஆட்டம்!

முதல் பின்னூட்டம் நீங்களே போட்டுக்கிட்டீங்க!*/

அப்படி அல்ல....

இது எனது புது முயற்சி அல்லவா....

எனது அறியாத தவறினால், அண்ணன் SPIDEY அவர்களின் பின்னூட்டம் அழிந்து விட்டது.

/*அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!*/

அழ கூடாது...

கூட்ஸ் வண்டி பாவம்.

Anonymous said...

2010ல் உங்க பிளாக் சிறந்த பிளாக்கா வர வாய்ப்பிருக்கு!

Anonymous said...

நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட தலையாய வலைப்பூவாக கூட்ஸ் வண்டியை அறிவிப்போம்!

கூட்ஸ் வண்டி said...

/*கூட்ஸ் வண்டில ஜனங்க பிரயாணம் பண்ண முடியாதே!*/

ஹி..ஹி.... டை வரும்... கார்டூம் ..மனுசங்க .. தானே.... ஹி...ஹி....

நம்ம கூட்ஸ் வண்டிலே அல்லாரும் வரலாமுங்க

/*சரக்கை ஏத்திட்டு வந்த எங்க ஸ்டேஷனுக்கு வரதை இறக்கிக்கிறோம்!*/

நன்றீங்க.....

/*கூட்ஸ் வண்டியிலே ஒரு பிளாகு வந்திடுச்சு!

பிளாக் செய்வதற்கு கூகிள் இடம் காலி ஆகிடுச்சு!

கூ கூ கூ கூ!*/

கவுஜ... கவுஜ....அருமை... அருமை... நன்றி....

Anonymous said...

ம்ம்!

கண்ணா!

அதிகமா பதிவு போட்ட பதிவர்களும், அதிகமா பின்னூட்டம் போட்ட பதிவர்களும் மறைஞ்சி போனதா சரித்திரமே இல்லை!

கூட்ஸ் வண்டி said...

/*கும்மி அலவ்டா?*/

கும்மி இல்லாது... ஒரு வலைப்பூவா..

ஸ்டார்ட் மீஜிக்...

சைய... சைய... சையா.....

Anonymous said...

முழு சுய விவரம் பார்க்க ன்னு போட்டுட்டு புரஃபைல்ல ஒரு டீடெய்லும் போடலையே நைனா!

கூட்ஸ் வண்டி said...

/*ஷாஜி கூறியது...
READY JOOT..*/

ஜிக்..
புக்...
ஜிக்..ஜிக்..
புக்...புக்...
ஜிக்.புக்.ஜிக்.புக்.ஜிக்.புக்.ஜிக்.புக்.ஜிக்.புக்....

Anonymous said...

//இது போங்கு ஆட்டம்!//

இதை நான் வழிமொழிகிறேன்!

கூட்ஸ் வண்டி said...

/* லல்லு பிரசாத் யாதவ் கூறியது...
இந்த வண்டிக்கு பெர்மிட் வாங்கியாச்சா?

லைசென்ஸெல்லாம் இருக்கா?

எங்கே 8 போட்டு காட்டுங்க பார்க்கலாம்?*/

ஏன் சாமி....
உங்க மாட்டுக்கு தீவனம் கொண்டு வர்றதுக்கு தானே என்னையே ஓட விட்டீங்க.... அதுக்குள்ளே மறந்துட்டீங்கலே....

Anonymous said...

//அதிகமா பதிவு போட்ட பதிவர்களும், அதிகமா பின்னூட்டம் போட்ட பதிவர்களும் மறைஞ்சி போனதா சரித்திரமே இல்லை!//

சூப்பர் பஞ்ச் தலைவா!

வாழ்க!

கூட்ஸ் வண்டி said...

/*வழிப்போக்கன் கூறியது...
அப்படியே எனக்கு லிஃப்ட் கிடைக்குமா?*/

Please contact OTIS or SCHINDLER or KONE

Anonymous said...

நானும் ஆட்டைக்கு வரலாமா?

கூட்ஸ் வண்டி said...

/*நையாண்டி நைனா கூறியது...
உங்கள் சேவை நாட்டுக்கு தேவை*/

இது நையாண்டி அல்லவே....

Anonymous said...

///*வழிப்போக்கன் கூறியது...
அப்படியே எனக்கு லிஃப்ட் கிடைக்குமா?*/

Please contact OTIS or SCHINDLER or KONE//

ஆமாம்! அப்படியே செய்யவும்!

Anonymous said...

///*நையாண்டி நைனா கூறியது...
உங்கள் சேவை நாட்டுக்கு தேவை*/

இது நையாண்டி அல்லவே....

//

இல்லை! சத்தியமாக அக்மார்க் நையாண்டிதான்!

வெண்டுமென்றால் தண்டவாளத்தின் மீது துண்டைப் போட்டுத் தாண்டுகிறேன்!

Anonymous said...

நாங்களும் வெள்ளாட வருவோம்!

Anonymous said...

நல்லாவே ஸ்ட்ரைட்டா போறீங்க...

Anonymous said...

அடப்பாவிகளா.... கூட்ஸ் வண்டிக்கு டிக்கட் இல்லை தான், அதற்காக இப்படியா...?

Anonymous said...

//அடப்பாவிகளா.... கூட்ஸ் வண்டிக்கு டிக்கட் இல்லை தான், அதற்காக இப்படியா...?//

ஆமாம்! அநியாயத்துக்கு பேசஞ்சர் கூட்டம்!

Anonymous said...

எனக்கு ஏதாச்சும் வேலை கிடைக்குமா?

முன்னால் டிடிஆர்
(விஜய டீ.ஆர் அல்ல)

Anonymous said...

என்னையும் ஆட்டைக்குச் சேர்த்துக்குங்க!

Anonymous said...

தமிழ்நாட்டுல இருக்கிற எல்லா ஸ்டேஷன் பேரையும் வரிசையா மூச்சுவிடாம என்னால சொல்ல முடியும்!

K1
K2
K3
K4
....

இப்படி

Anonymous said...

நைனா! அதெல்லாம் போலீஸ் ஸ்டேசன் பேருங்க!

இங்க ரயில்வே பத்தி பேசிகிட்டிருக்காங்க~

எங்கியாச்சும் மேடை கிடைச்சா போதுமே! மூச்சு விடாம பட்டியல் போட ஆரம்பிச்சிட வேண்டியது!

Anonymous said...

என் புரொபைல்ல எதையாச்சும் போட்டாத்தானே தெரியும்!

நான் யாருன்னு!

Anonymous said...

என் பதிவில் கூறப்பட்டும் கருத்துக்கள் முழுக்க முழுக்க கற்பனையாக உருவாக்கப் பட்டவையே அன்றி எந்த ஒரு உண்மைச் சம்பவத்தையும் குறிப்பிடுவன அல்ல!

ஏமாறுபவர்கள் கேட்கும் கேள்விகளுக்கோ/கேலிகளுக்கோ கூட்ஸ் வண்டியின் டிரைவரோ, கண்டக்டரோ, காது டாக்டரோ, கிளீனரோ பொறுப்பேற்க மாட்டார்கள்!

456/5 டிக்ளேர்டு!

ரவி said...

what the heck is going on here ?

Anonymous said...

வேறென்ன கும்மிதான்!

Anonymous said...

இந்த கும்மி என்ன? இதற்கும் மேலேயே பார்த்தவங்க நாங்க.....

Anonymous said...

நாற்பதுக்கு நாற்பது

Ungalranga said...

Hai... :)

கூட்ஸ் வண்டி said...

/*ரங்கன் கூறியது...
Hai... :)*/

HHHAAAIIIII... Mr. Rangan.

வருகைக்கு நன்றி திரு. ரங்கன் அவர்களே....

குவாட்டர் கோயிந்தன் said...

ஆத்தாடி...... கூட்ஸ் வண்டியை... இப்படி ஒரு வழி பண்ணிட்டாங்களே....

Anonymous said...

வணக்கம் கூட்ஸ் வண்டீ! வணக்கம்.

பொதுவாக உங்கள் கூட்ஸ்வண்டி இந்தியன் இரயில் துறையைப் போன்றே அங்கங்கு குறையும் குற்றமும் நிறைந்ததாகவே இருக்கிறது. முதல்முறையே இப்படித் தலையில் தட்டுகிறானே என எண்ண வேண்டாம். தங்கள் இக் கட்டுரையைக் கீழே திருத்தி அளித்திருக்கிறேன். கவனித்துப் பின்வரும் நாட்களில் எழுத்துப் பிழைகளைத் தவிர்க்கவும். அதுபோல் சிற்சில இடங்களில் சில சொற்களைப் பிரித்து எழுதுகிறீர்கள். சிலவற்றைச் சேர்த்து எழுதுவேண்டும்.

எடுத்துக் காட்டாக:- """இதற்கு கல்லும் ஒன்று தான் வைரமும் ஒன்று தான்""" -இத்தொடரை """இதற்கு கல்லும் ஒன்றுதான், வைரமும் ஒன்றுதான்""" -என்று எழுத வேண்டும்.

இனி தங்கள் கட்டுரை:-

வண்டிகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். அதில் நானொரு தனிவிதம். எனக்கென்று தனியாக எதுவும் கிடையாது. இதுவே எனது தனிச்சிறப்பு ஆகும். எனக்கென்று தனியே ஒரு வழித்தடமோ, குறியீட்டு எண்ணோ கிடையாது. நான் இன்ன பொருளைத்தான் ஏற்றிச்செல்ல வேண்டும் என்ற வரைமுறையோ கிடையாது. எனக்கான வேகமும் சிறப்பித்துக் கூறும்படி இல்லை. சிறப்பித்துக் கூறுவாரும் இல்லை. இருப்பினும் நான் எனது கடமையைச் செய்கிறேன். செய்து கொண்டே இருப்பேன்.

கூட்ஸ் வண்டியில் வராத பொருள்இல்லை. இதற்குக் கல்லும் ஒன்றுதான், வைரமும் ஒன்றுதான். கூட்ஸ் வண்டி பயணிக்கும் பாதைகளும் அதனால் தீர்மானிக்கப் படுவதில்லை. இது அநேக விரைவுப் பயணிகளுக்கு வழி விட்டே ஒதுங்கி நிற்கும்.

இது எந்த பொழுதிலும் முதல் பெட்டி கொண்டதை ஒருவாராகவும் வேறு பெட்டியில் உள்ளதை ஒருவாராகவும் கருதியது இல்லை. சுருங்க சொன்னால் கூட்ஸ் வண்டிக்கு வகுப்பு பேதம் பிடிக்காது.

இந்த கூட்ஸ் வண்டி தங்களுக்குத் தேவையான அனைத்தையும் சுமந்து வரும். இதற்கு தெரியாது அது குப்பையா, மாணிக்கமா என்று. ஆகவே தங்களின் மனம் போன போக்கில் தங்களுக்கு தேவையானதை எடுத்து அதற்குக் கூலியாய் உங்கள் கருத்தை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நம்மில் பலர் பல வண்டிகளில் பயணம் செய்திருப்பார்கள்இ ஆனால் கூட்ஸ் வண்டியில் பயணம் செய்திருப்பவர்கள் மிகச்சிலரே. ஆகையினால் இந்த
கூட்ஸ் வண்டிப் பயணம் உங்களுக்கு ஒரு இனிய அனுபவத்தையே தரும்.

கூட்ஸ் வண்டியைப் புதுப்பத்துப் பயணத்திற்குப் பணிக்கவும். நன்றி. வாழ்த்துகள்.

கூட்ஸ் வண்டி said...

பெயரில்லா நண்பரே...,
தங்கள் வருகைக்கு மிக நன்றி. தங்கள் கருத்துக்கு நன்றி...நன்றி...நன்றி....

நீங்கள் உங்கள் உண்மையான பெயருடனேயே வந்திருக்கலாமே? முகமூடி அணிந்து முகம் மூடி வந்ததன் காரணம் நாங்கள் அறியலாமா?

மங்களூர் சிவா said...

test

மங்களூர் சிவா said...

test success

மங்களூர் சிவா said...

48

மங்களூர் சிவா said...

49

மங்களூர் சிவா said...

50

கூட்ஸ் வண்டி said...

50 அடித்த எங்கள் தங்கம், சங்கத்து சிங்கம், கழகத்துப் போர் வாள், எதிரிகளின் சிம்ம சொப்பனம், தென்னாட்டு ஜனாதிபதி, வடநாட்டு வேங்கை, தமிழகத்து தம்பி, மங்களூரின் மாமனிதன். அண்ணன் மங்களூர் சிவா அவர்களுக்கு வணக்கம்.

Anonymous said...

//சங்கத்து சிங்கம், கழகத்துப் போர் வாள்//

இதெல்லாம் இவருக்குப் பொருந்தாதே!

இவையெல்லாம் எங்க சங்கத்துச் சிங்கம், போர்வாள் சென்னைக் கச்சேரியார் "தேவ்" அவர்களையே சேரும்!

Sanjai Gandhi said...

உள்ளேன் ஐயா..

எங்க ஊட்லையும் கும்மி நடக்குது.. வெள்ளிக் கிழமை கும்மி.. கொஞ்சம் எல்லாரும் எட்டிப் பாருங்க சாமியோவ்.. :)

ச.பிரேம்குமார் said...

வலைப்பூவிற்கு கூட்ஸ் வண்டி பெயரிட்டு அதற்கு அழகான விளக்கமும் கொடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்

சீக்கிரமே கூட்ஸ் வண்டியின் பயணத்தை காண ஆவல்

நாமக்கல் சிபி said...

புதுச் சரக்கு ஏதும் வண்டியில ஏத்தக் காணோமே!